2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மௌலவி நியாஸ் முஹம்மத் 57ஆவது வயதில் இன்று காலை காலமானார்.

Super User   / 2010 ஜூலை 04 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்கான ஆலோசகர் மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத்(கபூரி)இன்று காலை காலமானார்.

இலங்கையின் தலைசிறந்த சன்மார்க்க அறிஞர்களில் ஒருவரான மௌலவி நியாஸ் முஹம்மத்,கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்டார்.

1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி தலவாக்கலையில் பிறந்த மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார்.

இலங்கையின் வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிங்கள மொழியில் தஃவா பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.

பல்வேறு நாடுகளுக்கும் சன்மார்க்க பிரசாரங்களுக்காக விஜயம் செய்து உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்க அறிஞராகவும் இவர் திகழ்ந்தார்.

தேசகீர்த்தி,தேசமான்ய,கீர்த்திஸ்ரீ,சாம மான்ய,தேசபந்து போன்ற பல விருதுகள் ஏனைய சமூகங்களினால் வழங்கப்பட்டு பலமுறை இவர் கௌரவிக்கப்பட்டார்.

பௌத்த,இந்து மதத்தலைவர்களின் மதிப்பை பெற்றிருந்த மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத், தமிழ்,சிங்கள,முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்துக்காக பாடுபட்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • agoyajimmy Sunday, 04 July 2010 06:27 PM

    இன்னலிள்ளஹி வைன்னளிள்ளஹி ராஜஹூன்.
    ஒரு பெரியவர் காலமனார். ஆனால் இவர் போன்றவர்கள் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல், அல்லாவின் கிருபையால் பொய் சேர்த்துட்டார். இதற்கு பிறகு வரும் மார்க்க அறிஞர்களாலும் அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா அடிக்காமல் இருப்பது நல்லது. இவர் அடித்த ஜால்ரா எல்லாத்துக்கும் அல்லாகிட்ட பதில் சொலிட்டு தான் போகவேனும் .
    எல்லோருக்கும் மரணம் நிச்சியம் .....

    Reply : 0       0

    abdul ghafoor yasir Sunday, 04 July 2010 07:20 PM

    innalillahi vainna ilaihi rajiun
    win the swercam.

    Reply : 0       0

    Irshad Sunday, 04 July 2010 08:19 PM

    அல்லாஹ் அவருக்கு ஜென்னதுள் பிர்தௌசை கொடுப்பானஹா.ஆமீன்

    Reply : 0       0

    xlntgson Sunday, 04 July 2010 08:23 PM

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
    (நிச்சயமாக) நாம் இறைவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே (நிச்சயமாக) மீண்டும் திரும்புகின்றோம்.
    மார்க்கத்துறையிலும் கல்வித்துறையிலும் அவராலான சேவையை செய்திருக்கிறார். அவரது பிழைகளை அல்லாஹ் பொறுப்பானாக, அவரது நன்மைகளை பொருந்திக்கொண்டு!

    Reply : 0       0

    Ishrath Muhammad. Tuesday, 06 July 2010 02:30 AM

    திரு.அகோயஜிம்மி, தயவு செய்து ஒரு ஜனாசவை பார்த்து அப்படி செல்ல வேண்டாம், அவர் என்ன தவறு செய்தாலும் அது அல்லாஹ் பார்த்து கூலி குடுப்பான். ஒரு முஸ்லிமுக்கு அழகு அவனுடைய ஜென்ம விரோதி என்றாலும் அவன் மரணித்து விட்டால் அவருக்கு துஆ கேட்க வேண்டும்.

    Reply : 0       0

    najeenk Tuesday, 06 July 2010 03:38 AM

    அல்லா அவருடைய பாவங்களை மன்னிபனாக.
    அல்லா தான் இவ்வுலகின் பெரியவன் அவன்னுக்கு எல்லாம் தெரியும், ஆகையால் நாங்கள் யாரும் இத்தைபற்றி பேச எவ்வித அறிவும் இல்லை. அல்லாஹு அக்பர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X