2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மலேஷியாவில் இலங்கை அகதிகளின் உண்ணாவிரதம் இன்று கைவிடப்பட்டது

Super User   / 2010 ஜூன் 01 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளினால் கடந்த எட்டு நாட்களாகத் தொடரப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று பிற்பகல் கைவிடப்பட்டுள்ளது.

அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் மூன்றாவது நாட்டுக்கு அனுப்புமாறு குறித்த அகதிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதி அளித்ததை அடுத்தே அவர்களின் இந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

மலேசிய கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் பெண்கள், குழந்தைகள் உட்பட இலங்கைத் தமிழர்கள் 75பேர் அந்நாட்டு கடற்படை அதிகாரிகளினால் கடந்த மாதம் 19ஆம் திகதி பினாங்கு கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும்படி மலேசிய அரசாங்கத்தை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த கோரிக்கையினை முதலில் எற்றுக்கொண்ட மலேசிய அரசாங்கம், பிறகு ஏற்க மறுத்ததால் கப்பலை விட்டு இறங்காமல் தொடர்ந்து இரண்டு நாட்களாக பழுதடைந்த கப்பலிலேயே இருந்தனர். அதனையும் மீறி தங்களை இறக்க முயற்சி செய்தால் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றும் அறிவித்தனர்.

இதனையடுத்து, பினாங்கு துணை முதல்வர் ராமசாமி அவர்களை சமாதானம் செய்து கரைக்கு அழைத்துச் சென்றார். அதன்பின்னர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனி முகாம்களில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து பல்வேறு அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்தும் முகாம்களை விட்டு வெளியே அனுப்பவில்லை என்று முகாமில் உள்ள 67ஆண்கள் கூறினர்.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்படி ஆண்கள் மாத்திரம் கடந்த 23ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .