2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முள்ளிவாய்க்கால் சம்பவத்தை ஞாபகப்படுத்தி தமிழக மாணவர் தற்கொலை

Super User   / 2010 ஜூன் 22 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

"முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும், தமிழர்கள் மறக்கக் கூடாது" என கடிதமொன்றை எழுதிவிட்டு சென்னை நுண்கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவனொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மாணவரின் தற்கொலைக்கான  காரணம் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை, எழும்பூர் நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்றுவந்த மதுரை, விளாங்குடியைச் சேர்ந்த மாணவராண சசிக்குமார் என்பவர், கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள சென்னை பொலிஸார், தற்கொலை செய்துகொண்ட மாணவனால் எழுதப்பட்டதாகக் கூரப்படும் கடிதமொன்றைக் கண்டெடுத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில், "உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும். உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா? பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும் நாம் மறக்க கூடாது. வீடு தோறும் மரம் வளர்ப்போம். இல்லையென்றால் குடிநீர் விற்பனையாவது போல, காற்றும் வியாபாரமாகி விடும். மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். வாழ்த்தி வழியனுப்புங்கள்.

தயவு செய்து எனது உடல் உறுப்புகளை தானம் கொடுத்துவிடுங்கள். பிறந்த பூமியில் என்னை தவழ விடுங்கள். அசையாத புகைப்படமாக இருப்பதைவிட அசைந்தாடும் மரமாக நான் எழுவேன்.

நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நீ நிழல் கொடு. தமிழே உனக்கு தெரியாமல் உன்னை நான் நேசிக்கிறேன்." என்று அந்தக் கடிதத்தில் அவர் எழுதியுள்ளார் என மேற்படி செய்திகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 22 June 2010 09:02 PM

    மரம் வளர்ப்புக்காக இவர் இறந்தாரா, தமிழர் கொடுமைகள் தீர உயிரை மாய்த்துக்கொண்டாரா, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு விளம்பரமா? உயிர்களோடு விளையாடுவதும் தமிழர் பண்பாடு ஆகிவிட்டது, இதற்கா சொன்னார் திருவள்ளுவர் மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் என்று? உயிர் பெரிதா நீர் பெரிதா?

    Reply : 0       0

    s k gunarasa Tuesday, 22 June 2010 11:34 PM

    நீ சத்தது உன் பிரச்சினை........ இதைத் தமிழன் தலையில் சுமக்க விடுவதா? என்றாலும் உன் கவலை வரவேற்கத் தக்கது......உன் ஆத்மா சாந்தி அடையட்டும் ......

    Reply : 0       0

    nuah Wednesday, 23 June 2010 08:45 PM

    இயற்கை பாடத்தை படிப்பிப்பவர்கள் செய்த தவறா, செய்திகளின் பரபரப்புதன்மையை அறியாததன்விளைவா? வறட்சியும்வெள்ளமும் மாறிமாறி வரும்கட்டத்தில் இயற்கை தன்னை தானே காப்பாற்றிக்கொள்ளும்! ஒத்துழைக்காதவர்களை அது பலி எடுத்துவிடும்! கடல் பொங்கி பூகம்பம் ஏற்பட்டு எரிமலைகள் வெடித்து புகைமண்டலம் ஆகி புயலும் சூறாவளியும் ஏற்பட்டு கூண்டோடு போய்ச்சேரலாம்! ஏன் தனி தனியாக சாக வேண்டும்? மழைநீரை தடுத்து பயன் அடையாமல் குளங்களில் கட்டடங்கள் கட்டிக்கொண்டால் தாங்கிகளில் மழைநீரை பிடித்து 90 நாள் கிருமி அணுகாமல் காப்பதெப்படி?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X