2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மழை காரணமாக டெங்கு உட்பட தொற்றுநோய்கள் பரவும் அபாயம்

Super User   / 2010 மே 16 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக டெங்கு உட்பட தண்ணீர் மூலமாக பல நோய்கள் பரவிவருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்பறங்களிலும் வெள்ளநீர் பரவியுள்ள நிலையில், பழுதடைந்த மரக்கறி வகைகள் சந்தையில் விற்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரி ரிஷிந்த பிரேமரட்ன சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், பொதுமக்கள் வெளியிடங்களில் உணவு உட்கொள்வது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவித்த அவர், வீதியோரச் சந்தைகளிலிருந்து மரக்கறி உட்பட உணவு வகைகள் கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரினார்.

அத்துடன், கொதித்து ஆறிய தண்ணீரை பருகுமாறும் சுகாதார அமைச்சின் அதிகாரி கூறினார்.

பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களை நுளம்புகள் பரவாதவாறு சுத்தமாக வைத்திருக்குமாறும் ரிஷிந்த பிரேமரட்ன வேண்டுகோள் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .