2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மஹரகமைக்கு 24 மணிநேர நீர் விநியோகத்தடை

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு 7ஆம் திகதி , நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, செவ்வாய்க்கிழமை காலை 9 மணியிலிருந்து மறுநாள் காலை 9 மணிவரையான 24 மணிநேர நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய மஹரகம, பொரலஸ்கமுவ,  கொட்டவை, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே, பாதுக்க ஆகிய பிரதேசங்களுக்கே இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென்றும்  சபை ​தெரிவித்துள்ளது.

கலட்டுவாவயிலிருந்து மஹரகம வரையான நீர் விநியோகக் கு​ழாயில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத்தடை முன்னெடுக்கப்படவுள்ளதென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X