2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முப்படையும் பலப்படுத்தப்படும்: ஜனாதிபதி

Princiya Dixci   / 2017 மே 20 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமர்சிப்பவர்கள் எதனைக் கூறினாலும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான பொறுப்புக்களில் முப்படையிரைப் பலப்படுத்தும் செயற்பாடுகளைக் குறைவின்றி நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுப் (19) பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகிலுள்ள படைவீரர் நினைவு தூபி வளாகத்தில் நடைபெற்ற 2017 - தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

30 ஆண்டுகளாக நடைபெற்ற போரில் மரணமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற படையினருக்கான பொறுப்புக்கள் மற்றும் கடமைகளைக் குறைவின்றி நிறைவேற்றுவதுடன், நாட்டின் எதிர்காலத்துக்காக இப்போது பணியாற்றும் முப்படையினருக்கு புதிய தொழில்நுட்பத்துடன், உயர்தர சேவைக்காக தரமுயர்த்தும் பொறுப்பை நிறைவேற்றுவதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் படையினரின் நலன்களுக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை அமுல்படுத்தியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, படையினருக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு அனைத்துப் படையினருக்கும் வீடுகளை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புத் தொடர்பில் மட்டுமன்றி போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட தேசிய திட்டங்களிலும் அபிவிருத்தித் திட்டங்களிலும், சமூக நலன்புரி செயற்பாடுகளிலும் படையினர் வழங்கும் பங்களிப்பினை ஜனாதிபதி பாராட்டினார்.
 
தாய்நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த படையினருக்கு மரியாதை செலுத்திய ஜனாதிபதி, படையினரின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செய்தார்.

மதகுருமார்கள், மாகாண ஆளுநர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அலுவலர்களும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகளும் படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .