2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யுத்தம் முடிந்த போதிலும் அரசியல் தீர்வுக்கு காலம் எடுக்கும்-ஜனாதிபதி

Super User   / 2010 ஜூன் 28 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிக்கட்ட யுத்தம் கடந்த வருடம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தபோதிலும், அதற்கான  அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு காலம் எடுக்கும் என  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியிலேயே, அவர் இதனைக் கூறினார்.

இந்நிலையில், விரைவாக நூடில்ஸைத் தயாரிப்பது போன்று உடனடியானதொரு அரசியல்த் தீர்வை முன்வைக்க முடியாது எனவும்  ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியல்த் தீர்வை முன்வைப்பதற்கு  போதியளவான கால அவகாசம் தங்களுக்கு பிடிக்கும் எனக் கூறிய அவர், எனினும், உடனடியான அரசியல்த் தீர்வொன்றை முன்வைக்குமாறு உங்களால் கோரமுடியாது எனவும் தெரிவித்தார்.

அரசியலமைப்பானது வாரத்திற்கோ அல்லது மாதத்திற்கோ  வெளியாகும்  சஞ்சிகையை போன்றது அல்ல என்பதுடன், தங்களால் அடிக்கடி அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது எனவும்  மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

எனவே, அரசியல்த் தீர்வை முன்வைப்பதற்கு போதியளவு கால அவகாசம் பிடிக்கும் எனவும் மேலும் அவர் கூறினார்.

இதேவேளை,ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டால், அது  குறித்து கவலைப்படப் போவதில்லை எனவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.
 
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத்  திட்டம் மறுக்கப்பட்டமை அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Monday, 28 June 2010 03:23 PM

    அப்படியானால் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதிக்குப் பதவி வழங்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டு. அதற்காக அரசியல் சட்டத்தை விரைவாகவே திருத்த வேண்டியது நாட்டின் ஜனநாயகக் கடமை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X