2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’யுத்த நினைவுச் சின்னங்களை அகற்ற அரசாங்கம் இணக்கம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தில் காணப்படும் யுத்த நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட வேண்டுமென அம்மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை, முதுகெலும்பில்லாத அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

எனினும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஒன்றிணைந்த எதிரணி முற்றுமுழுதாக நிராகரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் காணப்படும் யுத்த நினைவுச் சின்னங்கள் என்பது, நாட்டின் அனைத்து மக்களும் அமைதியாய் வாழ்வதற்கு வழி செய்த இராணுவ வீரர்களை நினைவுக்கூருவதற்கான நினைவுச் சின்னங்கள் என்பதை
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொரளையில் அமைந்தள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமவீர ஆகியோர், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரபணுவில் வந்த பேய்கள் எனவும் ​அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர கடுமையாக விமர்சித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .