2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் தொடர்கிறது அச்சம்: வரதராஜ பெருமாள்

Super User   / 2010 ஏப்ரல் 05 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் போர் முடிந்து பல மாதங்களாகிவிட்ட நிலையிலும், யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடையே அச்சம் நீடிப்பதாக அப் பகுதியின் முன்னாள் முதல்வர் ஏ.வரதராஜ பெருமாள் இந்திய பத்திரிக்கை தினமணிக்கு அளித்த செவ்வியில் அவர் கூறியிருக்கிறார்...
1990-ல் இலங்கையை விட்டு வெளியேறிய அவர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தற்போது யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் கையில் துப்பாக்கியுடன் வீதிகளில் திரிந்த விடுதலைப் புலிகளோ, வேறு எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களோ, இலங்கை ராணுவ வீரர்களோ ஆதிக்கம் செலுத்தினர்.
தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அரசு ஆதரவு பெற்ற ஆயுதக் குழு யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருகிறது.
அவர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த ஆயுதக் குழுவை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி ஓரிரு இடங்களில் வெற்றி பெறுவது கூட, இந்த ஆயுதக் குழுவின் அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாக கேள்விக்குறியாகி விட்டது.
இதனால், தமிழ் தேசிய கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இந்த அச்சம் காரணமாகவே, தான் விரும்பும் கட்சி எது என்பதை சாதாரண மக்கள் வெளிப்படையாக கூறுவதில்லை.
அதனால்தான் தேர்தல் பிரசார கூட்டங்களில் மக்கள் கலந்து கொள்வதில்லை. மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படையாக கூறும் அளவுக்கு நிலையை மேம்படுத்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் 30 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்தியபோதும், தற்போது புலிகள் அமைப்பின் சாதக, பாதக அம்சங்கள் குறித்தோ, பிரபாகரன் குறித்தோ யாரும் பேசுவதில்லை.
விடுதலைப் புலிகளை கடந்த காலமாக கருதும் மக்கள், வருங்காலம் குறித்தே தற்போது சிந்தித்து வருகின்றனர். பொருளாதார முன்னேற்றம் அடையும் அதே நேரத்தில் அரசியல் உரிமையும் தேவை என யாழ்ப்பாணம் மக்கள் கருதுகின்றனர் என்றார் அவர்.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 06 April 2010 10:19 PM

    அமைதி இல்லை என்றால் முன்னாள் முதல்வர் அவர்கள் டில்லியிலேயே இருந்திருப்பார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X