2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சாவகச்சேரி மாணவன் கொலை வழக்கு பிடியாணை நடைமுறை;நீதிமன்றம்

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் சாவகச்சேரிப் பிரதேசத்தில் வர்த்தகரின் மகன் கடத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரைக் கைதுசெய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட  பிடியாணை உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என  யாழ் சாவகச்சேரி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சாவகச்சேரி பதில் நீதவான் எஸ்.கணபதிப்பிள்ளை இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தார்.

குறித்த உறுப்பினர் இதுவரையில் கைதுசெய்யப்படாமையால், இந்த பிடியாணை உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் யாழ் சாவகச்சேரி நீதிமன்றம் குறிப்பிட்டது.

யாழ் சாவகச்சேரி வர்த்தகரின் மகனான  குறித்த மாணவன் 30 மில்லியன் ரூபா கப்பம் கோரி கடந்த  மாதம் 14ஆம் திகதி  கடத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களில் ஒருவரின் வளவுக்குள் இருந்து குறித்த மாணவன்  கடந்த மாதம் 27ஆம் திகதி  சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X