2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழ். முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீள்திறப்பு

Super User   / 2010 மே 24 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளாதாக அப்பள்ளி வாசல் நிர்வாக சபை முக்கியஸ்தர் சட்டத்தரணி ரமீஸ் சற்று முன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டு யாழ் குடா நாடு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பிற்பாடு யாழ்  நகரில் முஸ்லிம்கள் வசிக்காத காரணத்தால் கைவிடப்பட்ட நிலையிலேயே இப்பள்ளிவாசல் காணப்பட்டது. எனினும் தற்போது யாழ் நகரில் முஸ்லிம்கள் மீண்டும் குடியேறியுள்ள காரணத்தால் மீள் புனர்நிர்மானத்துடன் இப்பள்ளிவாசல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு எதிர்வரும் வியாழக் கிழமை யாழ்ப்பாண ஜின்னா மைதானத்தில் வைத்திய முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரமீஸ் தெரிவித்தார்.

யாழ்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல், 1713ஆம் ஆண்டு ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டது. இதுவே யாழ்ப்பாணத்தின் முதல் பள்ளிவாசலும் ஆகும்.

எதிர்வரும் வெள்ளிக் கிழமை இப்பள்ளிவாசலில் இடம்பெறவுள்ள குத்பா பேருரை அஷ்ஷெய்க் எம்.ஜே.அப்துல் ஹாலிக் அவர்களால் நிகழ்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

You May Also Like

  Comments - 0

  • shankar Tuesday, 25 May 2010 03:55 PM

    This is a good move. They should open other mosques also for prayers. All people should support for this type of good things.

    Reply : 0       0

    shankar Tuesday, 25 May 2010 03:56 PM

    Its a good move. Other mosques also should be opened as soon as possible for prayers.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X