2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடக்கை விட தெற்குக்கே நல்லிணக்கம் வேண்டும்

Princiya Dixci   / 2016 மார்ச் 17 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லிணக்கம் தொடர்பான செய்தி வடக்கினை விடவும் இன்று தெற்குக்கு கொண்டுசெல்லும் தேவைப்பாடு நிலவுகின்றது. 

வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க வேலைத்திட்டத்தினைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்தல் தெற்கு மக்களின் கடமையாகுமென ஜனாதிபதி மைத்திபால சிறிசென தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்ற  'சாகித்திய கலாரச விந்தனய' நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் மேற்கொள்ள முடியாதெனவும் மதத் தலைவர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் தேசத்தின் எதிர்காலத்திற்காக இக்கடமையை பொறுப்பேற்க வேண்டுமென ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

இந்நாட்டை மகிழ்ச்சியாக வாழும் மக்களைக்கொண்ட ஒரு நாடாக கட்டியெழுப்புவதற்கு நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் ஆகிய சொற்களை யதார்த்தமாக்குதல் வேண்டுமெனத் தெரிவித்த ஜனாதிபதி, இவ்வார்த்தைகளை இன்று சிலர் கொச்சைப்படுத்தி அவமரியாதை செய்தாலும் நாட்டின் எதிர்காலமானது நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றைப் பிரயோக ரீதியில் நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியுள்ளதெனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .