2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புலிகளின் அடையாளச் சின்னங்கள் அகற்றும் நடவடிக்கையில் அரசாங்கம்

Super User   / 2010 மார்ச் 18 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்து அடையாளச் சின்னங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக உயர்மட்ட அரசாங்கத் தகவல்கள் டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்துள்ளன. 

வடபகுதியில் விடுதலைப் புலிகளின் அடையாளச் சின்னங்கள் உல்லாசப் பயணிகளின் மத்தியில் பிரசித்தி பெற்றவையாக காணப்படுகிறது. அந்த வகையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிடுவதற்காக மக்கள் செல்வதாகவும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விடுதலைப் புலிகளின் அடையாளச் சின்னங்களை உல்லாசப் பயணிகள் பார்வையிடுவதற்கு அரசாங்கம் ஊக்குவிக்கமாட்டாது எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. எனவே, இவற்றினை இல்லாதொழித்து குறித்த பகுதிகளில் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதனை சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஜோர்ஜ் மிச்சேல் டெயிலிமிரர் இணையதளத்திற்கு உறுதிப்படுத்தினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .