2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வந்தாறுமூலை வளாகம் முடக்கம்

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, முதலாம் வருட, இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், இரண்டு 1ஆம் ஆண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்தப் பல்கலைக்கழகக் கலைப்பீட 1ஆம் ஆண்டு மாணவர்கள், “வன்முறையற்ற மாணவர் அமைப்பு” என, பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கிச் செயற்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று (20) பகல், வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்த முதலாம் ஆண்டு மாணவர் இருவர் மீது, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த 1ஆம் ஆண்டு இரு மாணவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இந்தச் சம்பவத்தையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் சிலமணிநேரம் பதற்றமான சூழல் நிலவியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X