2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வன்னியில் கைதான வைத்தியரின் விசாரணையை நிறைவு செய்ய கோரிக்கை

Super User   / 2010 ஜூன் 14 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட வைத்திய அதிகாரி சம்பந்தப்பட்ட விசாரணைகளை நிறைவு செய்வதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற அனுமதி வழங்குமாறு குற்றப்புலனாய்வு துறையினர் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட்டிடம் வேண்டியிருந்தனர்.

இன்று இடம்பெற்ற நீதவான் விசாரணையின் போது, சட்ட மா அதிபரின் ஆலோசனைகளுக்கினங்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் குற்றப்புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிணங்க, எதிர்வரும் ஜுலை 7ஆம் திகதி சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் படி  குற்றப்புலனாய்வு துறையினருக்கு கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இவ்விசாரணை மேற்கொள்ளமுன்னர் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட்டினால் முல்லைத்தீவு வைத்திய அதிகாரி வைத்தியர் டி.சத்தியமூர்த்தி மற்றும் கந்தசாமி ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டனர் என்ற காரணத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .