2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘வெப்பமே உயிரிழப்புக்கு காரணம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தாலேயே, நந்திக்கடல் பகுதியில், மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், இன்று (12) தெரிவித்தார்.  

முல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில், நேற்று (11) பெருமளவான மீன்கள் உயிரிந்த நிலையில் கரையோதுங்கியுள்ளன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது.  

இது தொடர்பில் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், கடந்த வருடமும், அதிக வெப்பநிலை காரணமாக இதேபோன்று, மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .