2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விமல் வீரவன்ஸ வெளியிட்ட கருத்து அவதானிக்கப்படுகிறது-ஐ. நா

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க அமைச்சர் விமல் வீரவன்ஸ வெளியிட்ட கருத்தை  ஐக்கிய நாடுகள்   சபையின்  பாதுகாப்பு அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள்   சபை தெரிவித்தது.

இலங்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவை கலைப்பதற்கான முடிவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுக்கும்வரை இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை சுற்றிவளைக்குமாறும், அங்குள்ள உத்தியோகர்த்தர்களை தடுத்து வைக்குமாறும் பொதுமக்களிடம் நேற்று விமல் வீரவன்ஸ கோரிக்கை விடுத்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் 3 பேரைக் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பதானது, இலங்கைத் தலைவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் ஆரம்பகட்ட நடவடிக்கை என்றும் விமல் வீரவன்ஸ இதன்போது குறிப்பிட்டிருந்தார்.





                                              







You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Thursday, 01 July 2010 03:13 PM

    விமல் வீரவன்ச எந்தக் காலத்தில் சரியான வகையில் அரசியல் செய்தார்? மக்களை உணர்ச்சி வசப்படுத்தித் தானே நன்மையைத் தனதாக்கிக் கொள்பவர்.

    Reply : 0       0

    xlntgson Thursday, 01 July 2010 09:58 PM

    நுணலும் தன் வாயால் கெடும்! இவர் ஐ.நா பற்றி தெரிவித்தகருத்துகளில் அநேகம் சரியானாதாக இருந்தாலும் இந்தியாவைப்பற்றி எப்போது இவர் நியாமான கருத்தை தெரிவித்திருக்கிறார்? முற்றுகை, பணயக்கைதி போன்ற கருத்து பொதுவாக பயங்கரவாதஇயக்கங்களின் கருத்தாகும். இது போன்ற கருத்தை இதற்கு முன் எந்தஅமைச்சராவது தெரிவித்திருக்கிறாரா? இளைஞர்களுக்கு உயர்பதவிகள்! இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா? இவர் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்தும் 'வாய்' போட்டிருக்கிறார் ஒருவேளை சிங்காசனம் & அலரிமாளிகைக்கும் முயல்கிறாரோ தெரியாது!

    Reply : 0       0

    sheen Friday, 02 July 2010 08:48 PM

    ஐ.நா முற்றுகை தெஹ்ரானில் அக்காலத்தில் இப்போது ஜனாதிபதியாக இருக்கும் நஜாத் - அப்போது மாணவர் தலைவர் - இவ்வாறு பகிரங்கமாக சொல்லிக்கொண்டா செய்தார். ஐ.நா.வுக்கு பாதுகாப்பு வழங்கவும் இவ்வாறான வாய்பாடுகளினால் நாட்டின் பாதுகாப்பு செலவினங்களை கூட்டி மக்கள் வயிற்றில் அடிக்கவும் தான் இந்த சகோதரர்கள் இருக்கின்றனர். தற்கொலையாக போராடி சாகடித்துக்கொண்டுசாவேன் என்று புலிப்பாணி பேச்சு பேசிய களனி துட்டகெமுனுவும் இவர் போன்றவரே! இதெல்லாம் குறுக்குவழியில் பிரபல்யம் பெறுவது மட்டும் அல்ல மேற்குலக நாகரிகத்தை வலிய அழைப்பதாகும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .