2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வியட்நாம்- இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நேரடி விமான ​சேவையை ஆரம்பிக்க இரு நாட்டு பிரதமர்களும் அவதானம் செலுத்தியுள்ளனர்.  

வியட்நாமில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வியட்நாம் பிரதமர் கிரையன் சூன் புக் ஆகியோருக்கிடையில், முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று (11) இடம்பெற்றது.   

இதன்போதே, நேரடி விமானச் சேவைக் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.  

அத்துடன், வியட்நாமிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள், இலங்கை வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வியடநாம் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.  

குறித்த நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு, தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு தயாராகவிருப்பதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன் போது தெரிவித்துள்ளார்.  

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக இரண்டு நாடுகளினதும் விஸா நடைமுறையை மேலும் விரிவுப்படுத்துவது குறித்து விரைவில் கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X