2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

'வற்-ஐ அறவிட முடியாது'

Kanagaraj   / 2016 ஜூலை 15 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாநூ கார்த்திகேசு

புதிதாக விதிக்கப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி „வற்... மற்றும் அதிகரிக்கப்பட்ட „வற்... என்பவற்றை அறவிடவே முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வற்... திருத்தச்சட்டமூலம் தொடர்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று இருக்கின்றது. ஆகையால், அந்த திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தமுடியாது.

இந்த வழக்கை ஆராய்ந்து, நீதிமன்றத்துக்கு அறிவிப்பதற்கு மூன்றுவார காலம் எடுக்கும். ஆகையால், இந்த சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 20ஆம் திகதியன்று இடம்பெறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசியப் பொருட்களில் 15 பொருட்களுக்கு „வற்' நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 15 சதவீத „வற்...க்குப் பதிலாக, ஏற்கெனவே இருந்த 11 சதவீதமான „ வற்... அறவிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .