2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'வற்'க்கு 'கட்': 11 சதவீதம் இன்று முதல் அமுல்

Gavitha   / 2016 ஜூலை 12 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வற்' (பெறுமதி சேர்க்கப்பட்ட வரி) அதிகரிப்புக்கான தீர்மானத்தைக் கைவிடுமாறு, இடைக்காலத் தடையுத்தரவை உயர்நீதிமன்றம், நேற்றுப் பிறப்பித்தது. வற் மற்றும் தேசத்தைக் கட்டியெழும்பும் வரி ஆகியன அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மற்றும் பெங்கமுவே நாலக்க தேரர் ஆகியோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைப் பரிசீலனைக்கு உட்படுத்தியே போதே நீதிமன்றம், மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

பிரதம நீதியரசர் கே.என். ஸ்ரீபவன், மற்றும் புவனகே அலுவிஹாரே, பிரசன்ன ஜயவர்தன ஆகிய மூன்று நீதியரசர்கள் தலைமையிலான குழுவினரால் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனு மீதான விசாரணை நிறைவடையும் வரையிலும், வரி அதிகரிப்பைக் கைவிடவேண்டும் என்றும், அவ்வாறு மேற்படி இரண்டு வரிகளும் அதிகரிக்கப்பட வேண்டுமாயின், நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் நீதியரசர்கள் குழாம் கட்டளையிட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட இவ்விரு வரி அறவீடுகளும், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, மே மாதம் 2ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டதாக, மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, 11 சதவீதமான வற் அறவிடப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .