2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புத்தர் பெயரில் மதுசாலை;தகவல் திரட்ட தூதரகங்களுக்கு இலங்கை அரசு உத்தரவு

Super User   / 2010 ஜூலை 02 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தரின் பெயரில் இயங்கும் மதுபான சசாகள் ("புத்தாஸ் பார்") தொடர்பில் தகவல் திரட்டி அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாடுகளில் இயங்கிவரும் இலங்கைக்கான தூதுவராலயங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

பாரிஸ் நகரில் இயங்கி வரும் "புத்தாஸ் பார்"இன் கிளை நிலையங்கள் வேறு சில நாடுகளிலும் இயங்கி வருவதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

குறித்த பெயரில் இயங்கி வரும் மதுபான சாலைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடன் கலந்துரையாடி அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இதேவேளை, பெளத்த மதத்தை இழிவு படுத்தும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த மதும்பான நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .