2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முறைப்பாடு

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலுத்கம துசித குமார டீ சில்வா

பேருவளை நகரசபைக்குட்பட்ட கடற்பகுதிகளில், மீன் கழிவுகள் கொட்டப்படுவதனால் கடற்கரைச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, பேருவளை நகர சபைத் தலைவர் மசாஹிம் மொஹமட்டிடம் இன்று 17), முறைப்பாடு செய்துள்ளது.

பேருவளையில், வரலாற்று சிறப்புமிக்க கெச்சிமலை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கடற்கரை பகுதியில், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நாளாந்தம் உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடும் நடைபாதை அமையப்பெற்றிருக்கும் இடத்தில்,   இவ்வாறான நிலை காணப்படுவதாக   தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தன்னிடம் செய்த முறைபாட்டையடுத்து, இந்த விடயம் குறித்து துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பேருவளை நகரசபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .