2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெளிநாட்டு ‘சவப்பெட்டி’

Editorial   / 2017 ஜூன் 07 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலையினால் நில்வள கங்கை, கரைபுரண்டோடியது. இதனால், மாத்தறை மாவட்டத்தின் பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தில் மூழ்கின. இதேவேளை, தேயிலைத் தோட்டங்களும், கறுவாத் தோட்டங்களும் பாதிக்கப்பட்டன. 

இதில், மாத்தறை- தெனியாய, கொட்டப்பொல பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கறுவாத் தோட்டம் ஒன்றிலிருந்து, வெளிநாட்டு சவப்பெட்டியொன்று நேற்று (06) மீட்கப்பட்டுள்ளது. 

அந்த பெட்டியில், சடலமோ அல்லது சந்தேகத்துக்கு இடமான பொருட்களோ இல்லை. அப்பெட்டி, வேறொரு பிரதேசத்திலிருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டே, அவ்விடத்தில் கரையொதுங்கியுள்ளதாக அறியமுடிகிறது. அப்பெட்டியில், சுகாதார அமைச்சு கே.எஸ்.ஏ என்று எழுதப்பட்டுள்ளது. வெளிநாட்டில், குறிப்பாக சவூதி அரேபியாவிலிருந்து இங்கு அனுப்பிவைக்கப்படும் இலங்கையர்களின் சடலங்கள் இவ்வாறான பெட்டிகளிலேயே அனுப்பிவைக்கப்படும்.  

அவ்வாறு, சடலமாக அனுப்பப்பட்ட ஒருவருடைய சவப்பெட்டியாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. சடலத்தைப் புதைத்துவிட்டு, பெட்டியை வீட்டில் வைத்திருந்த போதே, வெள்ளத்தினால் அப்பெட்டி அடித்துவரப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.  

சவூதி அரேபியாவில், தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட அல்லது கொடுமை படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட, மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலம் அனுப்பப்பட்ட சவப்பெட்டியாக இது இருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.   

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .