2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்படுவோருக்கு மாற்றுக் காணி

Editorial   / 2017 ஜூன் 01 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தினால் அடிக்கடி பாதிக்கப்படுகின்ற மக்களை, அவர்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்கும் திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெயாங்கல்ல, கிரிகொல்ல பிரதேசங்களுக்கு புதன்கிழமை (31) நேரில் சென்ற அமைச்சர்  ரவூப் ஹக்கீம், வெள்ளப் பாதிப்புகள் பற்றி கேட்டறிந்துகொண்டார்.

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

“களுத்துறை மாவட்டத்திலுள்ள வெயாங்கல்ல பிரதேசம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் அதற்கு நிரந்தரமானதொரு தீர்வு காணப்படவேண்டும். குக்குலேகந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட பின்னர், மிகவும் மோசமாக வெயாங்கல்ல பிரதேசம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது.

“இந்த ஊரிலுள்ள நீர்ப்பாசனத்துறையில் தேர்ச்சியுள்ளவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்துவந்து, இந்தப் பிரச்சினைக்கான மாற்‌றீடு குறித்து நாங்கள் பேசுவோம்.

“மாவட்ட மட்டத்தில் அல்லது பிரதேச செயலாளர் மட்டத்தில் இதற்கு தீர்வு காண்பதற்கான திட்ட வரைபுகள், முன்மொழிவுகள் ஏதாவது ஏற்கெனவே செய்திருக்கலாம். அப்படியிருந்தால் அதனை நிறைவேற்‌றுவதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசிப்போம். அப்படி இல்லையென்றால்,  புதிய வகையில் இதற்கான மாற்றுவழிகள் குறித்து ஆலோசிப்போம்.

வெள்ளம் ஏற்படும்போது மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக இயந்திரப் படகு ஒன்றை நிரந்தரமாக வெயாங்கல்ல ஜும்ஆ பள்ளிக்கு வழங்கப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .