2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விசர்நாய்க்கடி நோய்: இரு மாகாணங்களில் மரணவீதம் பூச்சியம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 19 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி

விசர்நாய்க்கடி நோயினால், கடந்த 2015ஆம் ஆண்டு 24 பேர் மரணமடைந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள பொதுச் சுகாதார கால்நடை வைத்திய சேவைகள் பிரிவு, அந்த ஆண்டில், மத்திய மற்றும் தென் ஆகிய இரண்டு மாகாணங்களில் ஒருவர் கூட மரணிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.  

குருநாகல் மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலாக 8 பேர் மரணமடைந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக, கொழும்பு மாவட்டத்தில் நால்வர் மரணமடைந்துள்ளனர்.  

விசர்நாய்க்கடி காரணமாக 2014ஆம் ஆண்டு ஒன்பது மாகாணங்களிலும் 19 பேர் மரணமடைந்துள்ளனர். அந்த ஆண்டில் பதுளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஒருவரேனும் மரணிக்கவில்லை என்றும் அப்பிரிவின் புள்ளிவிவரவியலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

2015ஆம் ஆண்டு, 24 பேர் மரணமடைந்தனர். காலி, கம்பஹா, கண்டி, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஒருவரேனும் மரணமடையவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை, 2014 ஆம் ஆண்டு 134,943 பெண் நாய்களுக்கு கடந்த ஆண்டு 132,315 பெண் நாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 1,294,529 நாய்களுக்கு 2014 ஆம் ஆண்டும், 2015 ஆம் ஆண்டு 1,490,541 நாய்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் அந்தப் புள்ளிவிவர தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், 1970களில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையிலும் விசர் நாய்க்கடி நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 400 பேர் உயிரிழந்தனர் என்று சுட்டிக்காட்டிய பொதுச் சுகாதார கால்நடை வைத்திய சேவைகள் பதில் பணிப்பாளர் திருமதி றுவினி பிம்புரகே விசர்நாய்க்கடி நோயை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .