2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விமர்சித்தவர்களுக்கு 'வேட்பு மனு இல்லை'

Kogilavani   / 2016 ஜூலை 15 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்துன் ஏ ஜயசேகர

'ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு துரோகம் விளைவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்து அவரை அவமானப்படுத்தி, அரசாங்கத்தை நாசமாக்க திட்டமிட்ட எந்தவொரு நபருக்கும், நடைபெறவுள்ள                                    உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது' என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

'உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப்பரீட்சைகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது. இந்த நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது' என்று அவர் தெரிவித்தார்.

'இதே கொள்கை, எதிர்வரும் மாகாண மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போதும் பின்பற்றப்படும். கட்சிக்கு துரோகம் விளைவித்த எவராக இருந்தாலும் அவருக்கு வேட்பு மனு வழங்கப்படாது' என்றும் அவர் தெரிவித்தார்.

'கட்சியின் தலைமையகத்துக்கு இதுவரை 10,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இம்முறை நல்ல கல்வியறிவு உள்ள இளைஞர்கள் தெரிவு செய்யப்படுவர்' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .