2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஹைட்ரோகுளோரோ-புளொரோகாபன்: உபகரணங்களுக்கு இறக்குமதித் தடை

Editorial   / 2017 ஜூலை 20 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்ஷன் இராமானுஜன்

ட்ரோகுளோரோ - புளொரோகாபன் இரசாயன பதார்த்தத்தை கொண்டு உருவாக்கப்படுகின்ற உபகரணங்கள் மற்றும் பாகங்களை இறக்குமதி செய்தல், இலங்கையில் தயாரித்தல் மற்றும் சேகரித்தல் ஆகியவற்றுக்கு தடைவிதிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.  

இந்தத் தடை, 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் 2018​01-01ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில், அறிவிக்கப்பட்டது.  

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

 ஓசோன் படைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் ஹைட்ரோகுளோரோ - புளொரோகாபன் (Hydrochloroflurocabons - HCFC) இரசாயன பதார்த்த இறக்குமதியினை மட்டுப்படுத்துவதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை முன்வைப்பதற்காக அமைச்சரவையினால் 2016-08-16 ஆம் திகதியன்று தொழில்நுட்ப குழுவொன்று நியமிக்கப்பட்டது.  

- மொன்ட்ரியல் இணக்கத்தின் குறிப்பிடப்பட்டுள்ள ஓசோன் படையை தாக்கும் இரசாயன பதார்த்தங்கள் அடங்கிய உபகரண தொகுதிக்கு உரித்தான பயன்படுத்தப்பட்ட மற்றும் மீளமைக்கப்பட்ட உபகரணங்கள் இறக்குமதி செய்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்தல்.  

- Global Warming Potentialஆனது 100 பாகையும் மற்றும் Ozone Depleting Potential ஆனது 0.03 வீதத்தையும் கடந்து செல்லுகின்ற  

-  Global Warming Potential ஆனது 100 பாகையும் மற்றும் Ozone Depleting Potential ஆனது 0.03 வீதத்தையும் கடந்து செல்லாத ஹைட்ரோகுளோரோ - புளொரோகாபன் இரசாயன பதார்த்தத்தை கொண்டு உருவாக்கப்படுகின்ற உபகரணங்கள் மற்றும் பாகங்களை இறக்குமதி செய்தல், இலங்கையில் தயாரித்தல் மற்றும் சேகரித்தல் ஆகியவற்றை 2021-01-01 ஆம் திகதி முதல் தடை செய்தல்.  

-  குளிர்சாதன பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் போன்ற உபகரண சேவை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளi மேற்கொள்ளும் நிர்வனங்களுக்காக சூழல் பாதுகாப்பு அனுமதிபத்திரங்களை வழங்கும் போது, Refrigerant Recovery & Recycling Machine உபகரணம் ஒன்றினை இருப்பது கட்டாயம் எனும் நிபந்தனை 2019-01-01 ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சேர்த்துக் கொள்ளல் ஆகிய அக்குழுவினால் முன்வைக்கப்பட்டு சிபாரிசுகளாகும். அந்த சிபாரிசுகளின் அடிப்படையிலேயே மேற்படி அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .