2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹம்பாந்தோட்டை விவகாரம்: சபையில் சூடுபிடிப்பு

Kanagaraj   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவைக்குள் குழப்பங்களை விளைவித்தனர்.

இதனால், அவையில் சற்று பதற்றமாக நிலைமை தோற்றியது. ஒன்றிணைந்த எதிரணியினர் தங்களுடைய ஆசனங்களிலிருந்து எழுந்துநின்று கூச்சல் குழப்பமிட்டனர்.

வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா உரையாற்ற முனைந்த போதே இந்த நிலைமை ஏற்பட்டது.

துறைமுக விவகாரம் தொடர்பில், துறைமுக இராஜங்க அமைச்சர், இந்த சபைக்கு வந்து கருத்துரைக்க வேண்டும் என்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கோரிநின்றனர்.

துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த, 483 ஊழியர்களையும்  நிரந்தரமாகப் பணிக்கு அமர்த்துமாறு வலியுறுத்தி சத்தியாகிரகப் போரட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அவர்களை, கடற்படையினரை கொண்டு, கலைத்ததாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், சபையை கட்டுப்படுத்தியதன் பின்னரே, பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா உரையாற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .