2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முல்லேரியா கொலைச் சம்பவம்: நவம்பர் 1 இல் அடையாள அணிவகுப்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாருக் தாஜுதீன்)
தேர்தல் தினத்தன்று முல்லேரியாவில் ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை சுட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் உத்தியோகபூர்வ மெய்ப்பாதுகாவலரை அடையாள அணிவகுப்பு நடைபெறும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிரிஹான பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அநுர துஷார டி மெல் எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்காக கொண்டுவரப்பட வேண்டுமென கொழும்பு  மேலதிக நீதவான் பணித்துள்ளார்.

துமிந்த சில்வா மற்றும் இந்த சந்தேக நபர் சார்பில் மஹிந்த மத்துகம மற்றும் இந்துனில் பியதிஸ்ஸ வுடன் ஆஜரான வழக்குரைஞர் அனுஜா பிரேமரட்ன, சந்தேக நபர் ஏற்கனவே பிரேமச்சந்திரவின் சாரதியான சாந்த பெரேராவினால் குற்ற புலனாய்வு பொலிஸ் பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் இன்னொரு அடையாள அணிவகுப்புக்கு சட்டத்தில் இடமில்லை எனவும் வாதிட்டார்.

இந்த சண்டையில் துமிந்த சில்வாவும் சுடப்பட்டுள்ளார். துமிந்த சில்வாவை சுட்டது யார்?, துமிந்த சில்வா முதலில் சுட்டாரா? அல்லது பாரத லக்ஷ்மன் முதலில் சுட்டாரா? என்ற கேள்விகள் உள்ளன என அவர் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், 'சம்பவத்தை நேரில் கண்ட பலர் உள்ளனர். அவர்களும் சந்தேக நபரை அடையாளம் காண வேண்டும்' என குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியான மெரில் ரஞ்சன்  கூறினார்.

இதேவேளை பாரத லக்ஷ்மனின் சாரதி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளித்த வாக்குமூலத்தில், சம்பவ தினத்தன்று தான் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் வாகனத்தை அங்கொடை சந்திநோக்கி செலுத்தியதாகவும் பின்னால் இரண்டு கார்கள் தம்மோடு வந்ததாகவும் இரகசிய பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

'எதிரே வந்த வாகன தொடரணி ஒன்று வல்பொல் என்னும் இடத்திலுள்ள சிறிமா பண்டாரநாயக்க நூல் நிலையத்தின் முன் தமது பாதையை தடை செய்தது. பிரேமச்சந்திர, துமிந்த சில்வா ஆகியோர் தத்தம் வாகனத்திலிருந்து கீழே இறங்கினர்.

இருவரும் வாக்குவாதப்பட்டு கொண்டிருந்தபோது துமிந்த சில்வா, பிரேமச்சந்திராவின் முகத்தில் அறைய பிரேமச்சந்திர கீழே விழுந்தார். கீழே விழுந்தவரை துமிந்த சில்வா துப்பாக்கியினால் தலையில் சுட்டார். பின்னர் பிரேமச்சந்திரவை சுடும்படி அவர் தனது மெய்ப்பாதுகாவலரைப் பார்த்து சத்தமிட்டார். அப்போது லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை மெய்ப்பாதுகாவலர் தனது ரி-56 துப்பாக்கியினால் சுட்டார்' என அவர் தொடர்ந்து கூறியுள்ளார்.
மேற்படி சம்பவத்தில் பாரத லக்ஷ்மனுடன் அவரது மெய்பாதுகாவலர்களான தமித்த ஜயசேன, மொஹமட் அசீம் ஆகியோர் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .