2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கை இராணுவத்துக்கு தமிழ்ப் பெண்கள்; நாளை நியமனம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்துக்கு 100 தமிழ்ப் பெண்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நாளை சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி, பாரதிபுரம் பிரதேசத்தில் தமிழ்க் கலாசார ரீதியில் இந்த நியமனம் வழங்கப்படும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் தொழிற்படையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள இவர்கள், இராணுவ மகளிர் படையின் 6ஆவது படையணியின் கீழ் தொழிற்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த பெண்களுக்கான நியமனங்கள் நாளைய தினம் வழங்கப்படுவதை அடுத்து அவர்களுக்கான இரர்ணுவ பயற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் இந்த பயிற்சிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

வடக்கு கிழக்கிலிருந்து தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் கடந்த வாரங்களில் இடம்பெற்ற நிலையிலேயே மேற்படி 100பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X