2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விமானப்படையிடமிருந்த 100 ஏக்கர் விவசாய காணி விடுவிப்பு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, கேப்பாபிளவு பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (03) பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

அத்துடன், குறித்த வீடுகளுக்கு அண்மித்த பிரதேசத்தில் விமானப்படை முகாமுக்கு உட்பட்டிருந்த 100 ஏக்கர் விவசாய நிலம், பொதுமக்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு செயலாளர், மேற்படி வீடுகள் மற்றும் காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதோடு இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட வீடுகள் சிலவற்றையும் கையளிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அநுராதப்புரம் இராணுவ முகாமில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 20 கிலோ வோட்ஸ் சூரிய சக்தியினால் அமைக்கப்பட்ட இராணுவ பொறியியல் சேவை திட்டம், பாதுகாப்பு செயலாளரினால் திறந்துவைக்கப்படவுள்ளது.

இதேபோன்ற திட்டம் மதவாச்சி, பூணேவௌ விமானப்படை முகாம்கள் மற்றும் பாலாவி கடற்படை முகாம் ஆகியவற்றிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தியினால் அமைக்கப்பட்ட பொறியியல் சேவை திட்டங்களும் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .