2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1000 வர்த்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Super User   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அதிக விலைக்கு அரசி விற்பனை  செய்த,  சுமார் 1000 வர்த்தகர்களுக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் மூலம் இந்த வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் உத்தியோகஸ்தர் ஒருவர் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

'அதிக விலைக்கு அரசி விற்பனை செய்யப்படுவது தொடர்பாக எமக்கு புகார்கள் கிடைக்கத் தொடங்கின. வடக்கில் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து இது அதிகரிக்கத் தொடங்கியது' என அவர் கூறினார். (லக்னா பரணமான்ன)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .