2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

1000 ரூபா புதிய நாணய குற்றி

Kanagaraj   / 2012 நவம்பர் 12 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}



இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை வெளியிடவுள்ளது.

இராஜதந்திர உறவின் வைர விழா நிறைவாக வெளியிடப்படவுள்ள இந்த நாணயக்குற்றியின் முகப்பு பக்கத்தில் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் அணைக்கட்டின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. புதிய நாணயக்குற்றி 35.0 மில்லிமீற்றர் விட்டமும் 22.0 கிராம் நிறையையும் கொண்டது.

இராஜதந்திர உறவினை நினைவு கூறும் வகையில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் 57 ஆவது  ஞாபகார்த்த நாணயமாகும். 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்து உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைப்பார் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Moon Monday, 12 November 2012 07:01 AM

    இப்போது நாட்டில் இது ரொம்ப முக்கியமான விடயமக உள்ளது. எப்படி சரி விலை குறைப்பு ஏற்படும் என்று பார்த்தால் நடக்க மாட்டேங்கிறது.

    Reply : 0       0

    xlntgson Wednesday, 14 November 2012 02:35 AM

    VAANGAA VITTAAL PORUTGAL VILAI KURAIYUM. URPATTHI KOODA VENDUM. MARAKKARI VILAI POAL!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .