2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

13 வருடங்கள் சம்பளம் வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் மீட்பு

Super User   / 2011 ஜூன் 22 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1997 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்றதிலிருந்து அவரின் சவூதி அனுசரணையாளரினால் சம்பளம் வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

45 வயதான வீரவர்தன ஹெட்டியாரச்சிகே இந்ராணி மல்லிகா ஹெட்டியாராச்சி எனும் பெண்ணே மீட்கப்பட்டவர் எனவும் ஜாஸான் ஆளுநரான இளவரசர் முஹம்மட் பின் நாஸரின் அறிவுறுத்தலுக்கிணங்க அப்பெண்ணின்  அனுசரணையாளர் கைது செய்யப்பட்டதாகவும் ஜாஸான் பிராந்திய நிர்வாக வட்டாரங்களை மேற்கோள்காட்டி அராப் நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அப்பெண்ணுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் வரை அவர் ஜாஸன் பிராந்திய  சமூக விவகார பாதுகாப்பு நிலையத்தில் அப்பெண் வைக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளளது.

அதேவேளை அப்பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு பாக்கியான 60,000 சவூதி றியால்களை தன்னால் வழங்க முடியாதிருப்பதாக மேற்படி அனுசரணையாளர் கூறுவதாக ஜாஸன் பிராந்திய பிரதி ஆளுநர் அப்துல்லா மொஹமட் அல் சுவைத் தெரிவித்துள்ளார்.

இப்பெண்ணின் 20 வயதான மகன் அங்கவீனமானவர் எனவும் 19 வயதான மகள் தற்போதான் பாடசாலை கல்வியை முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவையிலுள்ள அப்பெண்ணின் கணவரான சுனில் பிரேமதிலக்க, தொலைபேசி மூலம் அராப் நியூஸ் பத்திரிகையிடம் பேசுகையில், மல்லிகா ஹெட்டியாரச்சி இறந்துவிட்டதாக குடும்பத்தினர் கருதியாக தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • jaleel nintavur Thursday, 23 June 2011 06:21 PM

    பெண்களே நீங்கள் ஆடம்பரமாக வாழ நினைத்தால் அந்த ஆடம்பரமே உங்களை அழித்து விடும். இந்த பெண்களின் அனைத்து பாவங்களும் உங்கள் கணவர்களை சென்றடையும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .