2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பிணையில் விடுக்கப்பட்ட 14 பேர் ஆஸி சென்றுவிட்டனர்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 08 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாரூக் தாஜுதீன்

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லமுயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பிணையில் விடுக்கப்பட்ட சந்தேகநபர்களில்  14 பேர் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றுவிட்டனர்.

101 சந்தேகநபர்கள் மே 2012 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்றதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கபுலி முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு மோசடிப்பிரிவு பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இந்த 14 பேரையும் பிணையில் எடுத்தவர்கள் நீதிமன்றத்தில் இருப்பதாக கொழும்பு மோசடிப்பிரிவு பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

புகலிடம் கோரிய 101 பேரை அவுஸ்திரேலியாவுக்கு களவாக அனுப்புவதில் முக்கியமாக பங்காற்றிய ஏழு பேரை பெப்ரவரி 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் 81 சந்தேகநபர்களையும் ஜுன் 28 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ஏனைய 14 சந்தேக நபர்கள் மீதும் நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X