2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'வடக்கில் புதைக்கப்பட்ட 1.5 மில்லியன் நிலக்கண்ணிகளில் 286,000 மாத்திரமே மீட்பு'

A.P.Mathan   / 2010 ஜூலை 15 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார, மதுஷிகா குணவர்தன)

வட மாகாணத்தில் யுத்த காலத்தில் சுமார் 1.5 மில்லியன் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டதாக கணிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவற்றில் இதுவரை 268,000 கண்ணிகள் மாத்திரமே அகற்றப்பட்டுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். வடக்கில் நிலக்கண்ணிகளை அகற்றும் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக நிலக்கண்ணி நடவடிக்கைக் குழுவொன்றை நியமிப்பதற்கு கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பல உள்ளுர்இ வெளிநாட்டு அமைப்புகள் நிலக்கண்ணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டாலும் மக்கள் மீளக்குடியேறுவதை விரைவுபடுத்துவதற்காக  இலங்கை இராணுவமே 90 சதவீதமான நிலக்கண்ணி அகற்றல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளது.  நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 860 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது எனவும்  அவர் கூறினார்.

அதேவேளைஇ வடக்கின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல கூறினார்.

தேவையான பணிகளுக்காக மின்சார சபை மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைகளுக்கூடாக இந்நிதி பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை இடம்பெயர்ந்த மக்களுக்கான கூரைத்தகடுத் தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் ஒத்துக்கொண்டார். இது தொடர்பாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில்  ஆராயப்பட்டதாகவும்  மேலும் ஒன்று அல்லது இரண்டு கப்பல்களில் கூரைத்தகடுகள் கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .