2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

155 இலங்கையர்கள் தாய்லாந்தில் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையைச் சேர்ந்த 155 சட்டவிரோத குடியேற்றவாசிகளை தாய்லாந்து அதிகாரிகள் கைது  செய்துள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இக்கைது நடவடிக்கைகளில் கனேடிய அதிகாரிகளும் தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டதாக கனடாவின் சி.ஜே.ஓ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து குடிவரவுப் பணியகமும் குற்றத் தடுப்புப் பணியகத்தின் கமாண்டோ பிரிவும் இணைந்து இக்கைது நடவடிக்கைகையை மேற்கொண்டாக தெரிவிக்கப்படுகிறது.

குடிவரவுப் பயணிகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து பாங்கொக் மற்றும் சாய்மாய் மாவட்டங்களில்  17 இடங்களிலிருந்து 155 பேர்  கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலருக்கு தமிழீழ விடுதலைப்  புலிகளுடன் தொடர்பிருப்பதாகவும் தாய்லாந்து புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சட்டவிரோத குடியேற்றவாசிகள் எவ்வித பயண ஆவணமுமின்றி தாய்லாந்துக்குள் நுழைந்துள்ளதாகவும் அவர்கள் மூன்றாவது நாடொன்றுக்கு செல்வதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும் கனேடிய அதிகாரிகளுக்கு தாய்லாந்து இராணுவத்தின் பாதுகாப்பு மத்திய நிலையம் அறிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இக்குடியேற்றவாசிகளை தாய்லாந்திலிருந்து வெளியேற்றுவதை விரைவு படுத்துவதற்காக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தாய்லாந்தின் சியாம் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .