2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாலின சமத்துவப் பட்டியலில் இலங்கைக்கு 16 ஆவது இடம்

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இவ்வருடத்திற்கான உலக பாலின சமத்துவ சுட்டியில் இலங்கை 16 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையிலேயே இலங்கை 16 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்தவருடமும் இலங்கை இதே இடத்தைப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்ஸர்லாந்தை தளமாகக் கொண்ட உலக பொருளாதார அமைப்பு 134 நாடுகளில் இந்த ஆய்வை மேற்கொண்டது. பொருளாதாரப் பங்குபற்றல், கல்வி அரசியல், சுகாதாரம் ஆகிய துறைகளில் கடந்த ஒரு வருட காலத்தில் பாலின வேறுபாடு எந்தளவு குறைக்கப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் நாடுகளுக்குப் புள்ளிகள் வழங்கப்பட்டன.

இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய பட்டியலில் அமெரிக்கா, கனடா ஆகியவற்றைவிட இலங்கை  முன்னிலை இடத்தைப் பெற்றுள்ளது. ஐஸ்லாந்து, நோர்வே, பின்லாந்து ஆகியன முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன.

முதல் 10 இடங்களிலுள்ள நாடுகள் விபரம்:
(1) ஐஸ்லாந்து, (2) நோர்வே, (3) பின்லாந்து, (4) சுவீடன், (5) நியூஸிலாந்து, (6) அயர்லாந்து (7) டென்மார்க், (8) லெசெதோ, (9) பிலிப்பைன்ஸ், (10) சுவிட்ஸர்லாந்து.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .