2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 167 மில்லியன் ரூபா நஷ்டம்

Super User   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

இலங்கை மின்சார சபை கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாளாந்தம் 167 மில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதாக மின்சக்தி, வலுசக்தி  அமைச்சர் சம்பிக்க ரணவக்க  நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை தெரிவித்தார். மின் உற்பத்திக்கு அனல் சக்தியில் தங்கியிருக்க வேண்டியிருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் கூறினார்.  

வறட்சியான காலநிலை காரணமாக, நாட்டின் மின் தேவையில் 80-85 சதவீதத்தை உற்பத்தி செய்வதற்கு அனல் சக்தியிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய சாதகமற்ற காலநிலை தொடர்ந்தால் இலங்கை மின்சார சபையை இயக்குவது கடினமாகிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இத்தகவல்களை தெரிவித்தார்.

சாதாரண நிலைமையில் 48 சதவீத மின்சாரம் அனல் சக்தி மூலமும், 47 சதவீதம் நீர் வலு மூலமும் எஞ்சியவை காற்று மற்றும் ஏனைய சக்திமூலங்கள் ஊடாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0

  • meenavan Wednesday, 19 October 2011 11:34 PM

    அமைச்சரே மின்சார கட்டண அதிகரிப்புக்கு ஒரு சைக்கினை காட்டி உள்ளீர்கள்? நிஜம் தானே?

    Reply : 0       0

    amnaheeb Thursday, 20 October 2011 08:37 PM

    எனவே மக்களே! பாரம் கனக்கின்றது, சுமக்க தயாராகுங்கள் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .