2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

18 வயதுக்கு குறைந்த யுவதி மீது வல்லுறவு: வேலைவாய்ப்பு முகவருக்கு விளக்கமறியல்

Super User   / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து திருகோணமலையிலிருந்து 18 வயதுக்கு குறைந்த யுவதியொருவரை கொழும்புக்கு அழைத்து வந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் ஒருவரை ஒக்டோபர் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு கோட்டை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

மொஹமட் ஹுஸைன் மொஹமட் சுஹுர் எனும் இச்சந்தேக நபரை திருகோணமலையைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

மேற்படி பெண் பொலிஸாரிடம் தெரிவித்த முறைப்பாட்டில், தான் 18 வயதுக்கு குறைந்தவராக இருந்தபோது திருகோணமலையில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேலை செய்ததாகவும் அங்கு தனது நண்பர் ஒருவரால்  சுஹுர் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அம்முறைப்பாட்டின்படி, அந்த யுவதியின் வீட்டிற்கு சென்ற சுஹுர் யுவதிக்கு  மத்திய கிழக்கில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தாயாரிடம் கூறியுள்ளார். தனது மகளுக்கு 18 வயதாகவில்லை என்பதால் கடவுச்சீட்டு பெற முடியாது என அத்தாயார் கூறியபோது, போலி பிறப்புச்சான்றிதழ் பெற்று கடவுச்சீட்டு பெறலாம் என சுஹுர் கூறியுள்ளார். இதன் மூலம் அந்த யுவதி கொழும்புக்கு அனுப்பப்பட்டார்.

கொழும்பில் தனியாமையான வீடொன்றுக்கு யுவதியை அழைத்துச் சென்ற சந்தேக நபர், அந்த யுவதியின் முகத்தில் கைக்குட்டையொன்றை வைத்து மயக்கமடையச் செய்தபின் அவரை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளர்.

அந்த யுவதி மயக்கம் தெளிந்தபோது, தனது ஆடைகள் களையப்பட்டிருப்பதையும் கட்டிலில் இரத்தக்கறைகள் பரவியிருப்பதையும் அறிந்துள்ளார்.  அதன்பின்னரும் அவரை வல்லுறவுக்குட்படுத்திய சந்தேக நபர் பின்னர் வேலைவாய்ப்பு முகவர் நிலையமென்றக்கு அதை;துச் சென்றார்.

பல தடவைகள் கொழும்பிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு அப்பெண்ணை சந்தேக நபர் அழைத்துவந்துள்ளார். இறுதியில்  தான் கர்ப்பிணியாக இருப்பதை உணர்ந்த யுவதி இது குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார்.

சந்தேக நபரிடம் தாயார் இது குறித்து விசாரித்தபோது, கருத்சிதைவு செய்துகொள்ள அறிவுறுத்தியதுடன் ஒரு லட்சம் ரூபா பணம் கோரியுள்ளார். அச்செலவை தாங்கமுடியாதென்பதால் குழந்தையை தத்தெடுத்துக்கொள்ள தாயார் தீர்மானித்துள்ளார்.

எனினும் ஒரு லட்சம் ரூபா பணம் தருமாறு தாயாரை அச்சுறுத்திய சந்தேக நபர், இல்லாவிட்டால் போலி பிறப்புச்சான்றிதழ் குறித்து, பொலிஸாரிடம் தெரிவிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள், அந்நிலையங்களின் ஊழியர்கள் மறறும் பலரிடமிருந்து தாம் வாக்குமூலங்களை பெற்றிருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றிற்கு தெரவித்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0

  • Winter Saturday, 24 September 2011 02:52 PM

    மனித நேயமே இல்லாத மிருகங்கள்.

    Reply : 0       0

    abuaasiya Saturday, 24 September 2011 04:26 PM

    இவ்வாறான கயவர்களிடமிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
    குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்னிறுத்தப்பட்டு கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.

    Reply : 0       0

    siraj Saturday, 24 September 2011 08:30 PM

    மடத்தனத்தின் உச்ச கட்டம்தான் ஒரு குமரியான பிள்ளையை தனிமையில் யாருடனும் அனுப்புவதென்பது இன்று மனித மிருகம் அதிகரித்துள்ளன. கவனம் மற்றவர்கள்.

    Reply : 0       0

    xlntgson Saturday, 24 September 2011 09:15 PM

    நயவஞ்சகத்தனம் என்பது இது தான், தன்னை நம்பியவர்களுக்கு துரோகம் செய்வதோடு மட்டுமல்லாமல் மிரட்டி பணம் வாங்கவும் துணிவு. நல்லவேளை இனியும் தாமதிக்க இயலும் என்று இல்லாமல் நீதியை நாடினரே பெண்கள், வெட்கப்பட்டுக் கொண்டு இராமல்.
    தவறு செய்வது- தவறுக்கு உடந்தை- கடைசியில் blackmail மிரட்டல், 'நல்ல' வெளிநாட்டு சேவைக் கலாச்சாரம்!

    Reply : 0       0

    Deva Sunday, 25 September 2011 06:38 PM

    வெளிநாட்டு முகவர்கள் மக்களை ஏமாற்றும் தொகை அதிகரித்து விட்டது.யாரும் இது குறித்து கவனம் எடுப்பதாக தெரியவில்லை?!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X