2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கையர் 18பேர் பலி; காரணமானவரை நாடு கடத்த அமெரிக்கா திட்டம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையைச்சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் 18 பேர் பலியாவதற்கு காரணமாக இருந்தாரென கூறப்படும் பல்கேரிய பிரஜையொருவரை அமெரிக்கா நாடு கடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

20 வருடங்களுக்கு முன்னர் ட்ரக் வண்டியில் மறைத்து எடுத்துச் சென்ற 18 இலங்கை கள்ளக் குடியேற்றக்காரர்கள் மூச்சுத்திணறி இறப்பதற்கு காரணமாக இருந்தாரென அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

தலைமறைவாக வாழ்ந்து வந்த குறித்த சந்தேகநபரான பல்கேரிய பிரiஐ அமெரிக்கா விலுள்ள சீட்டில் எனுமிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரை அவரது தாய் நாட்டுக்கு நாடுகடத்தக்கூடுமென அமெரிக்க அதிகாரிகள் திங்கட்கிழமை கூறினர்.

பல்கேரியாவில் 2002 இல் இவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும் இவர் தலைமறைவாகிவிட்டார். இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் நீண்ட தூர டிரக் சாரதியாக பணியாற்றினார்.

இவர் 1995 இல் பிலாஸ்டிக் பொருட்களுக்கிடையே 40 இலங்கையர்களை மறைத்து ருமேனியாவிலிருந்து ஹங்கேரிக்கு டிரக் வண்டியில் கொண்டு சென்றார்.

இதன் போது பலர் மூச்சுத் தினறி இறந்துவிட இவர் தப்பியவர்களை அதேயிடத்தில் விட்டுவிட்டு தலைமறைவாகினார் பின்னர் இவர் அமெரிக்கவுக்கு தப்பி சென்றுவிட்டார்.

பல்கேரிய அரசாங்கம் கேட்டபடி ரிபொனொல் என்ற பெயருடைய இவர் அமெரிக்காவில் தலை மறைவு வாழ்க்கை மேற்கொண்டிந்தபோது கைதுசெய்;யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .