2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'2 ஆம் உலக யுத்தத்தின்பின் கப்பல் அழிப்பில் இலங்கைக் கடற்படை சாதனை'

Super User   / 2011 மார்ச் 28 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் எதிரிகளின் 10 கப்பல்களை அழித்த ஒரே கடற்படையாக இலங்கைக் கடற்படை விளங்குகிறது என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திசாநாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்படைத்தளத்தில்  நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே கடற்படைத் தளபதி திசாநாயக்க இவ்வாறு கூறினார். இலங்கை முற்றிலும் கடலால் சூழப்பட்டுள்ளதால் இலங்கையின் பாதுகாப்பில் கடற்படை முக்கியத்துவம் வகிப்பதாக அவர் கூறினார்.

"இப்போதுள்ள கடற்படை 1930களில் இருந்த கடற்படையோ அல்லது 1950ளில் இருந்த ரோயல் கடற்படையோ அல்ல. இது, உலகின் இரக்கமற்ற பயங்கரவாதிகளை எதிர்கொண்டு தோற்கடித்த கடற்படையாகும்" என அவர் கூறினார்.

முன்னாள் கடற்படைத் தளபதிகளையும் நாட்டை பாதுகாப்பதற்காக உயிர்தியாகம் செய்த கடற்படை வீரர்களையும் நினைவுகூர்ந்த கடற்படைத் தளபதி திசாநாயக்க, யுத்தத்தில் வெற்றிகொள்வதில் வழங்கிய தலைமைத்துவத்திற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரையும் புகழ்ந்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .