2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

20ஆவது திருத்தம் வியாக்கியானம் அனுப்பிவைக்கப்படும்

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்படுமென, உயர்நீதிமன்றம், நேற்று (17) அறிவித்தது.  

20ஆவது திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 16 மனுக்கள் மீதான விசாரணைகள், நான்கு நாள்களாக முன்னெடுக்கப்பட்டு, நேற்று (17) நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டன. இதன்போதே மேற்கண்டவாறு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.  

ஜே.வி.வியின் எம்.பியான விஜித்த ​ஹேரத்தினால், தனிநபர் பிரேரணையாக, சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பின் 20ஆவது திருத்தம், சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றப்ப டவேண்டுமென, பொருள்விளக்கத்தை முன்வைக்குமாறு கோரி, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்பன்பில, மனுத்தாக்கல் செய்திருந்தார்.  

அதன்பின்னர், அந்த மனுவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் 16 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவையே, நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், 4 நாள்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசமைப்பைத் திருத்துவதற்கான, 20ஆவது திருத்த சட்டமூலத்தை, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ​சபையில் செப்டெம்பர் 05இல் சமர்ப்பித்தார்.  

அதனை, ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசானுமான அநுரகுமார திசாநாயக்க வழிமொழிந்தார்.  

“தனிநபர் ஒருவருக்கு இருக்கக் கூடிய அதியுயர் அதிகாரங்களை நீக்கி விட்டு, குறித்த அதிகாரங்கள், நாடாளுமன்றத்திடம் இருக்குமானதொரு திருத்தச் சட்டமூலமே இந்த 20ஆவது திருத்த சட்டமூலம்” எனக் குறிப்பிட்டிருந்த விஜித ஹேரத் எம்.பி, “ஜனநாயகம் தழைத்தோங்கவும் மக்கள் நலனுக்காகவுமே இந்தத் திருத்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டது” என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X