2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

20% சம்பள உயர்வு கோரும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தமது முன்னைய தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனம், 2012ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சகல பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும் 20 வீத சம்பள உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு உள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாது போனமையால் அவர்கள் பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக பயமுறுத்தினர். இவர்களின் கோரிக்கைகள் சிலவற்றை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மோதல் முடிவுக்கு வந்தது.

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் 3 சமவீதமே கல்விக்காக செலவளிக்கப்படுகிறது. இதை 6 சதவீதமாக அதிகரிக்க வேண்டுமென்பது இவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகும்.

குல்விசார் ஊழியர்களின் சம்பளத்துக்கு மேலான படி, 31 சதவீதத்திலிருந்து 62 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது மாத்திரமே இதுவரை நடந்துள்ளது என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளர் டாக்டர் ரெறான்ஸ் மதுஜித் தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் சம்பளம் சகல படிகளும் அடங்களாக 51,000 ரூபாவிலிருந்து 116,000 ரூபா வரை உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • asan Wednesday, 21 September 2011 07:19 PM

    கல்விசார் ஊழியர்களுக்கு மட்டும்தானா வாயும் வயிறும்? மற்ற உழியர்களின் நிலையை இந்த அரசாங்கம் இதுவரை புரிந்து கொள்ளாதது ஏன்?? அரசாங்கத்தின் வங்குரோத்து நிலையை காட்டுகிறது அல்லவா ...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .