2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'அரசாங்கத் தரப்பு எம்.பிகள் 20 பேர் ஐ.தே.க.வுடன் பேச்சுவார்த்தை'

Super User   / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட அரசாங்கத்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சுமார் 20 பேர் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

அத்துடன் எதிர்வரும் வருடத்தில் கட்சியினால் பல எதிர்ப்பு ஆர்பாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரியவை உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை அணியில் இணைத்தைமை கிரிக்கெட் அணி அரசியல் மயப்படுத்தப்படுவதன் அறிகுறியாகும் எனவும் அவர் தெரிவித்தார். (YP)
 


You May Also Like

  Comments - 0

  • Thilak Wednesday, 22 December 2010 06:43 PM

    இன்றைய ஜோக்?

    Reply : 0       0

    Miseran Wednesday, 22 December 2010 07:32 PM

    அவர்கள் இரகசியமாக பேசுவதை நீர் பரகசியமாக சொல்கிறீரே....என்னா அரசியல் ஞானம்....

    Reply : 0       0

    xlntgson Wednesday, 22 December 2010 08:45 PM

    அரசியலில் எதுவும் நடக்கலாம்! இருபது பேர் மடத்தனமான முடிவுக்கு வரமாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம். நிற்க, இருபது பேர் கட்சி மாறி அரசு கவிழ்ந்து விடுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .