2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 20 ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு

Super User   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 20 ஆண்டு  ஞாபாகர்த்த நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி கொழும்பு ரன்முத்து  ஹோட்டலில் இடம்பெற்றவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஈரானி நாட்டுத் தூதுவர் ரஹீம் ஜோர்ஜியும் விசேட அதிதிகளாக அமைச்சர் றிசாட் பதியுதீன், நடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், நூர்தீன் மசூர், ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் மேல் மாகாண  ஆளுநர் அலவி மெளலானாஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.ஹஸ்புல்லா வட  மாகான முஸ்லிம்களின் எதிர்காலம் எனும் தலைப்பில் விசேட உரையாற்றவுள்ளார்.

நெருக்கடிக்கு மத்தியில் க.பொ.த உயர் தரம், சாதாரன தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சாதனை நிலைநாட்டிய வட மாகாண முஸ்லிம் மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்படவுள்ளனர்.

இந்நிகழ்வை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி மற்றும்  எருக்கலம்பிட்டி மறுமலர்ச்சி ஒன்றியம் ஆகியனவே இணைந்து ஏற்பாடு  செய்துள்ளன.


You May Also Like

  Comments - 0

  • nihmath Thursday, 28 October 2010 07:08 PM

    இருபது வருடங்களுக்கு முன் முகாமுக்குள் கூட்டம். இப்போது ரன் முத்து ஹோடேலில் கூட்டம். . எல்லோருடைய காதிலையும் பூ சுத்தியாச்சா?

    Reply : 0       0

    Mohamed Razmi Friday, 29 October 2010 03:56 AM

    ஆஹா என்ன பொருத்தம். இந்த பொருத்தம்! புத்தளம் மண்ணின் மைந்தர்களை தவிக்கவிட்டு அவர்களின் தோளில் ஏறி ஊர்வலம் வரும் கோமான்கள்! அவர்களின் தற்போதைய தகுதிக்கும் பலத்தும் பலப் பிரயோகத்துக்கும் ரண்முத்து பொருந்தாது. துபாய் புர்ஜ் அல் அராப் தான் மிகவும் பொருத்தம் !!!

    Reply : 0       0

    roshan Friday, 29 October 2010 05:51 PM

    ஆம், எமது முன்னால் RRR மினிஸ்டர் இடம் இருக்கும் வசதிக்கும், செல்வத்துக்கும் இடம்பெயர்ந்த வட பகுதி மக்களின் 20ம் ஆண்டு நிறைவு வைபவத்தை புருஜ் எல் அரப்பில் நடத்தலாம்.

    Reply : 0       0

    Ibraheem Nachchiya Saturday, 30 October 2010 01:33 AM

    உள்ளூர் மக்களின் பிரச்சனைகளை நமது பிரச்சினைகளாக கருதி இனி மேல் செயல்படுவோம் என்று வாக்குறுதியளித்த பெருந்தகைகள் ராசிக் கடத்தல் விவகாரத்தை இந்த மகாநாட்டில் விவாதிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

    Reply : 0       0

    Fawzul ameen Sunday, 31 October 2010 08:40 AM

    ஒரு மறக்க முடியாத விடயம் அது. நாம் மறந்து விட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை ரன் முது ஹோட்டலில் கொண்ட்டாட வேண்டும் என்று நினைத்த அந்த அதி புத்திசாலிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இதற்கு வீநாகு பணத்தை இருபது வருடங்கள் ஆகியும் இன்னும் மர நிழலிலும் ஓட்டை குடிசையில் வாழும் எம்மவர்களுக்கு கொடுக்க கூடாதா.. வரும் இரானிய தூதுவரை புத்தளம் பகுதிக்கு அழைத்துச் சென்று எம்மவர்களின் அவல வாழ்க்கையை கொஞ்சம் காட்டினால் நல்லது என்று எண்ணுகின்றேன்.

    Reply : 0       0

    அப்துல்லாஹ் Wednesday, 03 November 2010 04:27 PM

    நல்லது அதிக பணம் இருந்தால் எவ்வளவோ ஏழைகள் இருக்காங்கள் அவங்களுக்குக் கொடுக்கலாம். சும்மா நம்ம பகுதிக்கு அழைத்து வந்து நம்ம பகுதியிட ஹாலாத்து என்னவாக இருக்கு என்று சொல்லி காட்டினால் எதிர்காலத்தில எவ்வளவூ பிரயோசனமாக இருக்கும். குறைஞ்ச பட்சம் ஏதாவது ஒரு பொது வெளியில் நடத்தி இருக்கலாம்.

    அது வடமாகாண முஸ்லிம் மாணவர்களென்று செல்றது எரிக்கலம்பிட்டி மாணவர்ள மாத்திரம்தான உள்ளடக்கும். தலைப்பைக் கொஞ்சம் மாற்றி சிறந்த பெறுபேறு பெற்ற எருக்கலம்பிட்டி மாணவர்கள் என்று வைத்திருந்தால் வடமாகாண முஸ்லிம் மாணவர்களை பாதிச்சிருக்காது இல்ல

    Reply : 0       0

    அப்துல்லாஹ் Wednesday, 03 November 2010 04:51 PM

    நல்லது தொடர்ந்து செய்யுங்கள் ஏன் இதை ரண்முத்து ஹோட்டலில்தான் நடத்த வேண்டுமோ? வடக்கில கூட நடத்தி இருக்கலாம் நல்ல பிரயோசனமா இருந்திருக்கும்

    ஆது சரி எருக்கலம்பிட்டி மாணவர்களுக்கு செய்யிற கௌரவத்துக்கு ஏன் வட மாகாண முஸ்லிம் மாணவர்களின் பெயரில் நடத்த வேண்டும்? தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்

    Reply : 0       0

    Yaalavan Fairoos Monday, 08 November 2010 03:35 AM

    இந்த நிகழ்விற்கு அமைச்சர் செல்லும்போதே வாசலில் நவ்ஷாத் நின்றதாக அவர் புத்தளம் பெரிய பள்ளியில் நடந்த கூட்டத்தில் சொன்னாராமே... உண்மையா..??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .