2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புலிகளுக்கு சிங்கப்பூர் வர்த்தகர் ஆயுத விற்பனை;அமெ.விசாரணை

Super User   / 2009 நவம்பர் 04 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப்புலிகளுக்கு ஆயுத விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங்கப்பூர் எதிர்க்கட்சி உறுப்பினரொருவர் விசாரணைகளுக்காக அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.

வர்த்தகரான பால்தேவ் நாயுடு எனப்படும் இவர் அமெரிக்காவின் வேண்டுகோளையடுத்து சிங்கப்பூர் பொலீஸாரினால் கடந்த செப்டம்பர் 22இல் கைது செய்யப்பட்டார்.பால்தேவ் நாயுடுவுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக ஆயுதங்களை தம் வசம் வைத்திருந்தமை,வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்தமை ஆகியனவும் இவற்றுள் அடங்கும்.

இதேவேலை இதே குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சிங்கப்பூர் வாசியான அனீபா ஒஸ்மான் என்பவர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.இவர்கள் இருவருக்கும் இடையில் ஆயுத விநியோகத்தில் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .