2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முகாம் மக்களின் வெளியேற்றத்திற்கு பிரான்ஸ் வரவேற்பு

Super User   / 2009 டிசெம்பர் 04 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னி மோதல்களின்போது இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில்
தங்கியிருந்த பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேற இலங்கை அரசாங்கம் அனுமதியளித்தமைக்கு பிரான்ஸ் வரவேற்புத் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வழமையான நிலைக்கு திரும்புவதற்கான இறுதித் தீர்மானம்
இதுவாகுமென்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு அண்மையில் விடுத்திருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

மோதல்களின்போது தப்பியோடிவந்திருந்த பொதுமக்கள் இராணுவத்தினரின்
பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, வன்னியில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட மோதல்களின்போது
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் விடுதலை புலிகளினால் பணயக்கைதிகளாக
தடுத்துவைக்கப்பட்டிருந்ததுடன், பெருந்தொகையான மக்கள் உயிரிழந்தமை
குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .