2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையின் மனித உரிமை தொடர்பில் ஐ.நா விசாரணை: அமெ.ஆதரவு

Super User   / 2009 டிசெம்பர் 16 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணைக்கு அமெரிக்கா தனது முழுமையான ஆதரவினை வழங்கவுள்ளது.

அமெரிக்க இராஜங்கத்திணைக்களத்தில் நடைபெற்ற  பத்திரிகையாளர் மாநாட்டில்  பொது விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் பிலிப் யே.குரோலி  இதனைக் கூறினார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டுமென்பதுடன், இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டுமெனவும் அவர் கூறினார். அத்துடன்  இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்தவிருப்பதாகவும் பிலிப் யே.குரோலி குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினத்தவருக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தகளை ஆரம்பிக்கவேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் பிலிப் யே.குரோலி கோரிக்கை விடுத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .