2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரிட்டன் பிரஜைகள் இலங்கைக்கு செல்வதற்கான தடை தளர்வு

Super User   / 2010 ஜனவரி 04 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டன்  பிரஜைகள் இலங்கைக்கு செல்வதற்கான தடை தளர்த்தப்பட்டிருப்பதாக  பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் டொக்டர் பீற்றர் ஹெய்ஸ் இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றிருந்த யுத்தம் காரணமாக பிரிட்டன் பிரஜைகள் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குச் செல்வதற்கு முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அண்மையில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு தாம் சென்றிருந்ததுடன், அங்கு பாதுகாப்புத் தொடர்பில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் பீற்றர் ஹெய்ஸ்  விடுத்திருக்கும் அறிக்கையில் கூறினார்.

எனினும், யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய  பகுதிகளுக்கு பிரிட்டன் பிரஜைகள்   செல்லவேண்டாமென தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில்,  யாழ்ப்பாணத்திற்கு செல்ல விரும்பும் பிரிட்டன் பிரஜைகள் ஏ -9 வீதியாலோ அல்லது விமானம் மூலமாகவோ பயணிக்குமாறு  பீற்றர் ஹெய்ஸ்  அறிவுறுத்தியுள்ளார்.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .